பரீட்சைகளை ஒத்திவைக்க திட்டம்!
திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாதுள்ள நிலையில் 2021ம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை உள்ளடக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மட்டத்தில் மேலதிக தகவல்களை சேகரித்த பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
No comments