Header Ads

இல்-து-பிரான்ஸ் ஆபத்தின் விளிம்பில்



 இல்-து-பிரான்சில் ஒரே நாளில், கொரோனாத் தொற்று வீதமானது, 100.000 பேரிற்கு 404.5 இனைத் தாண்டி உள்ளது. 400 இனைத் தாணடினால் உள்ளிருப்பு ஆறிவிக்கப்படும் எனும் நிலையில் இன்று இது ஆபத்து எல்லையை மீறியுள்ளது


இல்-து-பிரான்ஸ் ஆபத்தின் விளிம்பில் உள்ள நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துரித கதியில் சில தீவிர சிகிச்சை நோயாளிகள் வான்வழி மூலம் வேறு இடங்களிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பிரான்சில் 333 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (15.03.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும்  67 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.745  ஆக உயர்ந்துள்ளது.

பரிசில் மட்டும் இன்று 23 பேர் சாவடைந்துள்ளனர்.

இங்கு 5.878 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.166   பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக்  கொள்ளளவைத் தாண்டிய நிலையில  101.6% ஆக உச்சமடைந்துள்ளது


.

இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1.217 பேர் -   3.3403  பேர் சாவு  (+23)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  886  பேர் - 1.892 பேர் சாவு (+9)
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 678 பேர் - 2.342 பேர் சாவு (+13)
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 913 பேர் -  2.140 பேர் சாவு (+11)
    Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  510 பேர் - 1.431 பேர் சாவு (+2)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  528 பேர் - 1.521 பேர் சாவு (+3)
    L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 639 பேர் -  1.449 பேர் சாவு (+1)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  507 பேர் -  1.557 பேர் சாவு (+5)

No comments

Powered by Blogger.