பிரான்சின் கொரோனாச் சாவுகளின் எண்ணிக்கையானது 90.000 இனைத் தாண்டி உள்ளது.
இன்று மார்ச் மாதம் 12ம் திகதி பிரான்சின் கொரோனாச் சாவுகளின் எண்ணிக்கையானது 90.000 இனைத் தாண்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 223 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 90.146 இனைத் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 25.229 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனைத் தாண்டி 4.015.560 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 64 809 (+233) பேர் சாவடைந்துள்ளனர். மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.174 பேர் சாவடைந்துள்ளனர்
24.749 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
4.033 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
பிரான்சின் வைத்தியசாலைகளில் 82 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
No comments