இன்னும் 4 -6 வாரங்களில் ஊரடங்கு நீக்கப்படும் அதிபர் மக்ரோன் அதிரடி அறிவிப்பு
"ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் - நான்கு, ஆறு வாரங்கள் - பொறுத் திருங்கள்.."
ஊரடங்கு நேரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அதிபர் மக்ரோன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதிபர் மக்ரோன் இன்றைய தினம் Seine-Saint-Denis மாவட்டத்துக்கு விஜயம் செய்த சமயம் அங்கு ஸ்தானில்(Stains) அமைந்துள்ள இளைஞர் தொழிற் பயிற்சி வளாகத்துக்கும் (Industreet) சென்று இளையோரைச் சந்தித்தார்.
அச் சமயம் அங்கிருந்த இளைஞர் ஒருவர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்ரோனிடம் "ஊரடங்கு நேரத்தை மாலை ஆறு மணியில் இருந்து ஏழு மணியாக மாற்றமுடியாதா" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த போதே தளர்வு களுக்கு "நான்கு, ஆறு வார காலம் பொறுத்திருங்கள்" என்று அவர் சிரித்தவாறு தெரிவித்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தடுப்பூசி ஏற்றும் பணிகளை வேகமாக முன்னெடுக்க இன்னும் சுமார் ஆறுவார காலம் தேவையாக உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டே அதிபர் மக்ரோன் அவ்வாறு நான்கு, ஆறு வாரங்கள் பொறுக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இதேவேளை.
பாரிஸ் உட்பட தொற்று அதிகமாக உள்ள இருபது மாவட்டங்களிலும் பொலீஸ் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அடுத்த கட்டமாக நடைமுறைப்படுத்த இருக்கின்ற கட்டுப்பாடுகள் குறித்து கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. பாரிஸ் பிராந்தியத்தை வார இறுதி நாட்களில் முடக்குகின்ற யோச னையை மேயர் ஆன் கிடல்கோ எதிர்த்து வருகிறார். புதிய அறிவிப்புகள் பெரும் பாலும் இந்த வார இறுதியில் வெளியி டப்படும்.
No comments