கடந்த 24 மணி நேரத்திற்குள் 173 பேர் சாடைந்துள்ளனர்.
கொரோனாப் பரவலினால் 23 மாவட்டங்கள் அதியுச்சக் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்
கடந்த 24 மணி நேரத்திற்குள் 173 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 88.447 இனைத் தாண்டியுள்ளது.
இன்று 23.396 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் பிரான்சில் மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.882.408 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 63.270 (+170) பேர் சாவடைந்துள்ளனர். மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.174 பேர் சாவடைந்துள்ளனர்
24.625 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.689 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
பிரான்சின் வைத்தியசாலைகளில் 74 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
நிலைமை கடுமையாக மோசமடைந்து, இல்-து-பிரான்சிஇல்-து-பிரான்சின் 100.000 பேரிற்கு 173 பேர் எனும் அளவிற்கு நிலைமை ஆபத்தாக உள்ளது. செய்-சன்-துனியில் (93) மட்டும் இந்த விகிதமானது 450 இனைத் தாண்டி உள்ளது.
பிரான்சில் 439 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (06.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 43 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.238 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு 5.389 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 925 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 84% ஆகும்
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1069 பேர் - 3.303 பேர் சாவு (+10)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 790 பேர் - 1.831பேர் சாவு (+4)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 622 பேர் - 2.279 பேர் சாவு (+3)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 842 பேர் - 2048 பேர் சாவு (+7)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 566 பேர் - 1.410 பேர் சாவு (+2)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 445 பேர் - 1.471 பேர் சாவு (+8)
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 573 பேர் - 1.395 பேர் சாவு (+4)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 462 பேர் - 1.501 பேர் சாவு (+5)
No comments