நாடு முழுவதும் 220.000 பேருக்கு தடுப்பூசிகள்
இன்று சனிக்கிழமை 220.000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வார இறுதியில் நாடு முழுவதும் பரவலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவது அதிகரிக்கப்படும் என முன்னதாக பிரதமர் அறிவித்திருந்தார்.
இன்று சனிக்கிழமை மாலை 17.30 மணி வரை நாடு முழுவதும் 220.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சற்று முன்னர் சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார். இது கடந்த வார இறுதியை விட இரண்டு மடங்கான எண்ணிக்கையாகும்.
<<இது நாளையும் தொடரும்!>> எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், தாதி, தீயணைப்பு படையினர், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments