இன்று மார்ச் 1 ஆம் திகதி புதிய மாதத்தில் சில புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
எரிவாயு!
இன்று முதல் எரிவாயு கட்டண விலையில் மாறுதல் ஏற்படுகின்றது. குளிர் கால பாவனையை கருத்தில் கொண்டு, இன்று முதல் 5.7% வீதத்தால் விலை அதிகரிக்கப்படுகின்றது.
இதில் சமையலுக்கு மாத்திரம் பயன்படுத்தும் எரிவாயுவில் 1.5 வீதமும், சமையல், வெந்நீருக்காக பயன்படுத்தும் எரிவாயுவில் 3.4% வீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவில் 5.9% வீதமும் விலை அதிகரிக்கப்படுகின்றது.
சிகரெட்!
இன்று முதல் சிகரெட் கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன. குறைந்த பட்ச கட்டணமாக 10 சதத்தால் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. குறிப்பாக Austin மற்றும் Elixy red போன்ற சிகரெட்டுகள் பெட்டி ஒன்றுக்கு 10 சதத்தால் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதனால் பெட்டி ஒன்றின் சராசரி விலை 9.90 யூரோக்களாக அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உணவு பற்றுச்சீட்டு!!
2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட உணவு பற்றுச்சீட்டுகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகின்றது. சுகாதா நிலமைகளை கருத்தில் கொண்டு, இம்மாதத்துடன் நிறைவடையும் உணவு பற்றுச்சீட்டுகள் அனைத்தின் கால எல்லைகளையும் வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி (2021) வரை நீட்டிக்கப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments