பிரான்சில் கொரோனா !! புயலிற்கு முன்னயை ஆபத்தான அமைதி - விஞ்ஞான ஆராய்ச்சித்துறை!!!
«பிரான்சில் தற்போது இருக்கும் கொரோனா நிலைமையானது புயலிற்கு முன்னரான ஆபத்தான அமைதி» என பிரான்சின் சுகாதாரத்துறையின் அதியுயர் கல்வியின் தொற்றில் போராசிரியரும் ஆராய்ச்சியாளருமான பஸ்கால் கிரெப்பே (Pascal Crépey) தெரிவித்துள்ளார்.

«விஞ்ஞான ஆராய்ச்சித்துறையும் இதே எச்சரிக்கையையே வழங்கி உள்ளது. பிரான்ஸ் உள்ளிருப்பில் இருந்து தப்பித்தாலும் தொற்றின் அதிகரிப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது»
«23ம் திகதி ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20.000 இலிருந்து 20.500 வரையான தொற்றுக்கள் உறுதி செய்யப்படுகின்றது. ஆனால் பெப்ரவரி இறுதியில் இது ஊச்சத்தைத் தொடும். இது புயலிற்கு முன்னயை ஆபத்தான அமைதி»
எனவும் பேராசிரியர் எச்சரித்துள்ளார்.
No comments