உள்ளிருப்பு வேண்டுமா? இல்லையா? என்ற முடிவை மக்களே தீர்மானிக்க வேண்டும்- ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்
இன்றைய தொலைக்காட்சிச் சேவையில், அனைத்துமக்களும் «அதியுச்ச பொறுப்புடன்» நடந்து கொள்ள வேண்டும் என பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
«எங்களது கொரோனத் தடுப்பு ஊசி நிகழ்ச்சி நிரல், உடனடியாகக் கொரோனாத் தொற்றை நிறுத்தாது. அது உள்ளிருப்பு வேண்டுமா இல்லையா என்ற முடிவை எடுக்காது. மக்களின் பொறுப்பு மற்றும் அவதானம் மட்டுமே இதனை முடிவு செய்ய முடியும்» என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
«எமது மூன்று கொள்கைகளான பரிசோதனை - துணை நிற்றல் - பாதுகாப்பு என்ற நடவடிக்கை மட்டுமே கொரோனாத் தொற்றை நிறுத்த முடியும்» எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
No comments