Header Ads

கொரோனாவின் பரவல் பிரான்சில் பாடசாலைகள், கொலேஜ் மூடப்பட்டுள்ளன



கொரோனாவின் பரவல் பிரான்சில் தீவிரமாகப் பரவ ஆரம்பித்ததையடுத்து, அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தாலும், பாடசாலைகளில் கொரோனப் பரவல் ஏற்படுவதைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை.
 
பாடசாலைகளை மூடினால், பெண்கள் வேலைக்குச் செல்வது தடைப்பட்டு பொருளாதாரம் முடங்கி விடும் என்பதில் மட்டுமே அரசாங்கம் கண்ணாயிருக்க, கல்வியமைச்சரும் தன் பங்கிற்கு, பிரான்சில் கல்வி அவசியம் எனப் பிரகடணப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.
 
ஆனால் பாடசாலைகளில் கொரோனத் தொற்றுக்கள் பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் 934 வகுப்புகள் மூடப்பட்டுள்ளன.
 
83 பாடசாலைகள், 16 கொலேஜ்கள், 6 லிசேக்கள் ஆகியன மூடப்பட்டுள்ளதாக, அதே கல்வியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
 
பாடசாலைகள், கொலேஜ் மற்றும் லிசேக்களில் கூட பிரித்தானிய வைரசின் தாக்கம் ஏற்பட்டுள்ளதெனவும், இது பெரும் ஆபத்து எனவும் மருத்துவத் துறையினர் தொடர்ந்தும் எச்சரித்து வருவது குறிப்படத்தக்கது. 

  

No comments

Powered by Blogger.