Header Ads

சீனாவின் கொரோனத் தடுப்பு ஊசிகள் பாதுகாப்பற்றவை - ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்

சீனாவின் கொரோனத் தடுப்பு ஊசிகள் பாதுகாப்பற்றவை என்றும், புதிய உருமாற்றக் கொரோனா வைரசிற்கு எதிராகப் பேராடும் சக்தியற்றவை என்றும், நேற்று பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், சீனாவின் சினோபார்ம் போன்ற கொரேனாத் தடுப்பு ஊசிகளை விமர்சனம் செய்திருந்தார்.

 
 
இதற்குச் சீனா உடனடியான எதிர்வினையை ஆற்றி உள்ளது.
 
«எங்களது கொரோனத் தடுப்பு ஊசிகள்  கொரோனாவை அளிக்கும் சக்தி சக்தி உடையவையும் பாதுகாப்பானவையும் ஆகும்» என சீனாவின் இராஜதந்திரி பதிலளித்துள்ளார்.
 
 

«சீன அரசாங்கம் கொரோனவிற்கெதிரான தடுப்பு ஊசிகளின் பாதுகாப்பிலும், திறனிலும், பெரும் அக்கறை கொண்டுள்ளது. மூன்றாம் கட்ட மருத்து ஆய்வுகளின் பின்னரும், இதன் திறனும் பாதுகாப்பும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது» என சீன வெளிவிகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பிரான்சிற்குப் பதில் அளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.