Header Ads

பிரான்சில் கொரோனாவின் தீவிரத்தால் மருத்துவதுறையில் பின்னடைவு…. !

 


பிரான்சில் கொரோனா தொற்றின் தீவிரத்தால் வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக, புற்று நோய்களை கண்டறிவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், பிரான்சில் புற்று நோய் காரணமாக கிட்டத்தட்ட 200,000 பேர் உயிரிழக்கின்றனர். 4

200,000 புதிய புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 100,000 நோயாளிகள் கண்டறியப்படாததால் Ligue contre le cancer (LCC), நிறுவனத்தின் தலைவர் Axel Kahn இத்தகவலை அறிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் எனவும், மருத்துவமனைகளில் திடீர் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமையே சரியான சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ள முடியாமல் போனதாக தகவல் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 2020-ஆம் ஆண்டில் 23 சதவீதம் புற்று நோயாளிகள் கண்டறியப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.