ஈழத்தில் நடைபெறும் பேரணிக்கு ஆதரவாக லண்டனில் திரண்ட தமிழர்கள்!
பல தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் இன்று 4 ஆம் நாள் வெற்றிகரமாக நகர்கின்றது. தற்போது இந்த பேரணி கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி பேரணிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து லண்டனில் மாபெரும் பேரணியொன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC)- யால் தொடங்கப்பட்டுள்ளது.
அதற்காக தமிழர்கள் ஒன்றுகூடி தங்களது வாகனங்களில் பேரணியை தொடங்கியுள்ளனர்.
No comments