பிரான்சில் தடுப்பூசி போடுவதை முற்றாக மறுக்கும் இளையோர்!
தடுப்பூசி பற்றிய சந்தேகம் அதிகமாக இருக்கும் பிரான்ஸில் கொரோனா முதல் அலைக்குப் பிறகு ஒரு கணக்கெடுப்பில் தடுப்பூசி போடுவதை வளர்ந்தோரில் மூவருக்கு ஒருவர் முற்றிலும் எதிர்க்கிறார்கள்.
மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அதன் குணாதிசயங்களைப் பொறுத்து ஒரு தடுப்பூசியை ஏற்றுக்கொள்கிறார் என்பதைக் காட்டுகிறது, அவர்களின் முடிவு பெரும்பாலும் அதன் செயல்திறன் மற்றும் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டது.
புதிய ஆய்வினை ஆசிரியர்கள் பிரான்சில் 18-64 வயதுடைய கிட்டத்தட்ட 2,000 பெரியவர்களின் பிரதி மாதிரியை இரண்டு பகுதி இயங்கலை(Online) கேள்வித்தாளைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
பிரெஞ்சு உழைக்கும் வயது மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் எந்த கோவிட் -19 தடுப்பூசியையும் மறுப்பார்கள் என்று ஆசிரியர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.
No comments