கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தும் முதல் ஆய்வு!
பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி மேலுமொரு ஆய்வை ஆரம்பித்துள்ளது.
முதன்முறையாக குழந்தைகளுக்கு அஸ்ட்ராஜெனேகா COVID-19 தடுப்பூசியை செலுத்தி ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது
இந்த தடுப்புமருத்து குழைந்தைகளுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பையும், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது என்பதை மதிப்பிடுவதற்கான ஆய்வு ஆகும்
6 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி பயனுள்ளதா என்பதை புதிய நடு நிலை சோதனை தீர்மானிக்கும் என பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுமார் 300 தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இந்த மாதத்தில் முதல் டோஸ் செலுத்தப்படலாம் என எதிர்பார்ப்பதாகவும் ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.
உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள டபுள் டோஸ் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, மற்ற தடுப்பூசிகளை விட மலிவானது மற்றும் விநியோகிக்க எளிதானது என கூறப்படுகிறது
No comments