சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்துக்கு வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு புதிய நுழைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சுவிஸ் பயணிக்கும் அனைவரும் புறப்பட விமானத்திற்குள் ஏறுவதற்கு முன் கொரோனா இல்லை என சோதனை முடிவை காட்ட வேண்டும்.
இந்த சோதனை புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ரயில் மற்றும் பேருந்தில் சுவிஸ் பயணித்தால், ஆபத்தான நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை காட்ட வேண்டும்.
வழக்கம் போல ஆபத்தான நாடுகளிலிருந்து சுவிஸ் திரும்புபவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.
தனிமப்படுத்தலில் இருப்பவர்கள் 7வது நாளுக்கு பிறகு சோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என முடிவு வந்தால் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட போதிலும் புதிய 7 நாள் தனிமைப்படுத்தல் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
எல்லை தாண்டிய பயணிகளுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவு தேவை, ஆனால் அவர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா இல்லை என்ற முடிவை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தனிமைப்படுத்த வேண்டும்.
சுவிஸில் நுழையும் போது தவறான தகவல் தரும் நபர்களுக்கு 100 பிராங்க் அபராதமாக விதிக்கப்படும்.
கொரோனா இல்லை என்ற சோதனை முடிவு இல்லாமல் நுழைபவர்களுக்கு 200 பிராங்க் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments