மணற்புயலின் தாக்கம் பிரான்சின் மேகங்களை மஞ்சள் நிறமாக்க உள்ளது.
சகாரா பாலைவனத்தில் இருந்து வரும் மணற்புயலின் தாக்கம் பிரான்சின் மேகங்களை மஞ்சள் நிறமாக்க உள்ளது.
பிரான்சின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகள் இந்த அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட உள்ளன.
ஏற்கனவே பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் இதே போன்ற சகாரா மணற்புயலின் தாக்கத்தினை பிரான்சின் தெற்குப் பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.
இது மீண்டும் இன்று முதல் தாக்க உள்ளதாகப் பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்றும் நாளையும் இதன் தாக்கம் இருந்தாலும், திங்கட்கிழமை இதன் தாக்கம் மிகவும் உச்சம் அடையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments