பரிசில் ஆயுதங்களுடன் ஆறு சிறுவர்கள் கைது
பரிசில் ஆயுதங்களுடன் ஆறு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Essonne இரட்டைக் கொலை வழக்குடன் நேரடி தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் 1 ஆம் வட்டாரத்தின் des Halles பகுதியில் வைத்து இவர்கள் நேற்று புதகிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். rue Lescot, வீதியில் ஆறு சிறுவர்கள் மிக வேகமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதை பார்த்த காவல்துறையினர் அவர்களை விரைவாக விசாரித்ததுடன், அவர்கள் அனைவரையும் சோதனையும் இட்டனர். அவர்கள் அனைவரும் 15 தொடக்கம் 17 வயதுடையவர்கள் ஆவர்.
அவர்கள் அனைவரிடம் கைத்துப்பாக்கிகள் இருந்துள்ளன. கூரான கத்தி, ஜன்னலை உடைக்கும் சுத்தியல் போன்றனவும் இருந்துள்ளன. தாமதிக்காமல் அனைவரும் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் Essonne இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புபட்டமை உறுதி செய்யப்பட்டது.
No comments