Header Ads

பிரான்சில் முதன்முறையாக அதிகபட்சமாக 20°C வெப்பம் பதிவாகியுள்ளது.


 பிரான்சில் முதன்முறையாக குளிர் காலமொன்றில் அதிகபட்சமாக 20°C வெப்பம் பதிவாகியுள்ளது. 

 
கடந்த சில வாரங்கள் நிலவிய கடும் குளிர் தற்போது ஓரளவு சீரடைந்து நிலமை வழமைக்குத்திரும்பியுள்ளது. Météo-France வெளியிட்ட தகவல்களின் படி பிரான்சின் வடகிழக்கு பிராந்தியங்களில் அதிகூடிய வெப்பம் நிலவியுள்ளது. குறிப்பாக  Le Touquet நகரில் அதிகபட்சமாக 19.3 ° C வெப்பம் நிலவியுள்ளது. 
 
பெப்ரவரி மாதம் ஒன்றில் நிலவிய அதிகூடிய வெப்பம் இதுவாகும்.
 
முன்னதாக 1959 ஆம் ஆண்டில் 19.1 ° C வெப்பம் பதிவாகியிருந்ததே அதிகூடிய சாதனையாக இருந்தது. 

No comments

Powered by Blogger.