Header Ads

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர்!



 ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முதலாவது வைத்தியர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் காலியில் உள்ள கராபிட்டி வைத்தியசாலையில் ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை உயிரிழந்துள்ளார் என அரச மருத்துவ அதிகார சங்கத்தின் மருத்துவர் ஹரிதா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த வைத்தியரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.