Header Ads

ஜேர்மனியில் கடுமையாக்கப்படும் எல்லைக் கட்டுப்பாடுகள்…

 


ஜேர்மனியில் கொரோனா தொற்றின் புதிய மரபு பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சின் ஒருபகுதியாக எல்லைக் கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்கியுள்ளது.

அந்தவகையில் சில விதிவிலக்குகளுடன், ஒஸ்திரியாவின் டைரோல் மாகாணத்துடனான எல்லையுடன் செக் குடியரசின் எல்லையும் ஜேர்மனி மூடியுள்ளது.

குறித்த பகுதி ஊடாக, ஜேர்மன் மக்கள், டிரக் ஓட்டுநர்கள், போக்குவரத்து மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஜேர்மனிக்கு வெளியே வசிக்கும் எல்லை தாண்டிய தொழிலாளர்களுக்கு அதிர்ப்தி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் முடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 7 வரை நீடிக்க அதிபர் எஞ்கலா மேர்க்கெல் மற்றும் ஜேர்மனியின் 16 மாநில ஆளுநர்களுடன் சந்திப்பின்போது முடிவு எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.