இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்ததிற்கு அங்கீகாரம் !
கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதற்கான இந்தியாவுடனான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
கொள்முதல் ஒப்பந்தத்தை திருத்தங்களுக்கு உட்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments