கனடாவில் உருமாறிய கொரோனா! விஞ்ஞானிகள் அச்சம்
கனடாவில் பிரேசிலில் தோன்றிய உருமாறிய கொரோனா பரவியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளனர்.
கனடாவின் Toronto நகரில் குடியிருப்பாளர் ஒருவருக்கு பிரேசிலில் தோன்றிய உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கனடா முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பிரேசிலில் தோன்றிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் தோன்றிய உருமாறிய கொரோனா உண்மையான முதலில் தோன்றிய வைரஸை விட அதிகமாக பரவும் என விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments