Header Ads

பிரான்ஸில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன, அடுத்தது உணவகங்கள் திறப்பது குறித்து ஆலோசனை!!

 தொடர்ச்சியாக நாட்டின் கொரோனாக் காலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி, சில பெருநகரங்கள் தங்கள் அருங்காட்சியகங்களைத் திறந்து, பின்னர் நீதிமன்றங்கங்கள் அவற்றை மூடியுள்ளன.


இதனையடுத்து, பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பசெலோ (Roselyne Bachelot), நாட்டில் கொரோனாத் தொற்று குறைவடைய ஆரம்பித்ததும் அருங்காட்சியகங்களைத் திறக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.



ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெவித்திருக்கும், பரிஸ் உட்படப் பல பெரு நகர முதல்வர்கள் மற்றும் பிரந்தியத் தலைவர்கள் அனைத்துக் கலாச்சார மையங்களையும் ஒன்றாகத் திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ile-de-France, Hauts-de-France, Centre Val-de-Loire, Occitanie, Sud ஆகிய பிராந்தியங்களின் தலைவர்களும், Paris, Lille, Rennes, Clermont-Ferrand, Montpellier, Strasbourg, Tours, Rouen, Grenoble, Reims, Nantes ஆகிய பெருநகர முதல்வர்களும் இந்தக் கோரிக்கை மனுவில் இணைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.