இலங்கையில் கொரோனாவிற்குப் பலியான முதலாவது பொலிஸ் உத்தியோகஸ்தர்..!
ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தில் முதலாவது கொவிட் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மொனராகலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே உயிரிழந்தவராவார்.குறித்த பொலிஸ் பரிசோதகர் கடந்த 3 ம் திகதி இருதய நோயால் அவதிப்பட்ட நிலையில், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments