பிரித்தானியாவிற்கான விமான போக்குவரத்து தடையை விதித்த ரஷ்யா!
பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் காரணமாக பிரித்தானியாவிலிருந்து ரஷ்யா வரும் விமானங்களுக்கும் மற்றும் ரஷ்யாவிலிருந்து பிரித்தானியா புறப்படும் விமானங்களுக்கும் ரஷ்யா தடை விதித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கொரோனா வைரஸ் பணிக்குழு இதனை அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து, அந்த நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல உலக நாடுகள் பிரித்தானியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments