Header Ads

பிரான்ஸின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மணல் மழை



பிரான்ஸின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் மணல் மழை("pluies sableuses") பொழியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபிரிக்காவின் சஹாராவில் இருந்து மத்தியதரைக் கடலைத் தாண்டி வீசும் சிரோக்கோ(Sirocco) என்ற வரண்ட கடும் புயல் காற்றுக் காரணமாகவே நாட்டின் சில பகுதிகளில் மணல் துகள்கள் மழையோடு சேர்ந்து பொழியக் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லியோன் பிராந்தியத்தில் இன்று காலை வானம் பாலைவன மணல் தூசு மூட்டத்தால்(sable du Sahara)மஞ்சள் நிறமாக மாறி இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. வேறு சில பகுதிகளிலும் இது தோன்றலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சஹாராவில் இருந்து மணலை வாரிக் கொண்டு வீசுகின்ற வரண்ட புயல் காற்று வடக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் கோடை காலப்பகுதியில் ஆங்காங்கே மணல் மழையாக மாறிப் பொழிவது வழக்கம். ஆனால் தற்போதைய பனிக் குளிர் காலப்பகுதியில் அவ்வாறு மணல் மழை பெய்வது வழமைக்கு மாறானது என்று காலநிலை அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
(படம் :சஹாரா பாலைவனப் புளுதியினால் லியோன் நகர வானம் இன்றுகாலை மஞ்சள் நிறமாகத் தோன்றிய காட்சி)

No comments

Powered by Blogger.