பிரேஞ்சு மக்கள் மத்தியில் நம்பிக்கை இழக்கும் !! எமானுவல் மக்ரோன் !!
கடந்த செவ்வாய்க்கிழமை, எமானுவல் மக்ரோனும், வியாழக்கிழமை பிரதமர் ஜோன் கஸ்தெக்சும் வழங்கிய உறுதி மொழிகளில் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை இல்லை எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தடுப்பு ஊசிகளின் விநியோகம் மிக மோசமாகத் தடைப்பட்டுள்ள நிலையில், 75 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான தடுப்பு ஊசிகளே எபபோது போடப்படும் என்று புரியாத நிலையில், எமானுவல் மக்ரோன், கோடை கால இறுதிக்குள், அதாவது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதிக்கு முன்னர், தடுப்பு ஊசி போட விரும்பும் அனைத்து மக்களிற்கும் பிரான்சில் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு விடும் என்று உறுதியளித்துள்ளார்.
முதல் கொரேனாத் தடுப்பு ஊசி பிரான்சில் போடப்பட்டு இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், 2 மில்லியன் பேரிற்குத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன. இதில்; வெறும் மூன்று இலட்சம் பேரிற்கு மட்டுமே இரண்டாம் கட்ட ஊசிகள் போடப்பட்டுள்ளன. 1.7 மில்லியன் பேரிற்கு வெறும் முதற்கட்ட ஊசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.
சில ஊடகங்களிற்காக, கருத்துக் கணிப்பு ஆய்வு நிறுவனமான Ifop-Fiducial நடாத்திய ஆய்வில் 58 சதவீத மக்கள் எமானுவல் மக்ரோன் அளித்த உறுதியில் நம்பிக்கை இல்லை எனவும், அது நடக்க முடியாத காரியம் எனவும், வாக்களித்திருப்பமை குறிப்பிடத்தக்கது.
No comments