இல்-து-பிரான்சில், கடுமையான சோதனை நடவடிக்கைகள் !!!
ஊரடங்கு மீறலைக் கண்காணிக்க, பரிசையும் அதன் புறநகரங்களையும் உள்ளடக்கிய இல்-து-பிரான்சில், கடுமையான சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகி உள்ளன.
மிகப் பெரிய அளவில் ஆரம்பித்துள்ள இந்தச் சோதனை நடவடிக்கைகளில் 800 காவற்படையினரும் ஜோந்தார்மினரும் ஈடுபட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சரின் ஆணையின் பேரில் பரிசும் அதன் புறநகரங்களும் இந்த நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளன.
ஊரடங்கை மீறும் அனைவரிற்கும் 135€ குற்றப்பணம் அறவிடப்பட உள்ளது. தொடர்ச்சியாக மீறுபவர்களிற்கான குற்றப்பணம் 3500€ வரை அறிவிடப்படும்.
No comments