வீதியில் வீடற்றவர் ஒருவரின் சடலம் பரிசில் மீட்க்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பரிஸ் 1 ஆம் வட்டாரத்தின் rue de Turbigo வீதியில் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களாலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவல்களின் படி, சாவடைந்தவர் ஒரு வீடற்றவர் (SDF) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments