ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதியிடம்…!
பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக ஜப்பான் அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
775 மில்லியன் ரூபாய் பெறுமதியான 31 ஜீப் வண்டிகள், 4 பேருந்துகள் மற்றும் 10 வான்கள் ஆகிய வாகனங்களே இவ்வாறு ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
இதனை அடுத்து இலங்கைக்கான ஜப்பான் தூதுவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், ஆயிரத்து 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதியுதவி திட்டத்தின் முதல் கட்டமாகவே குறித்த வாகனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
No comments