சிறிலங்காவுக்கு எதிரான ஓய்வூதிய வாய்ப்புக்கள் ! கோபத்தை வெளிப்படுத்திய செய்தி !!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் காணப்படும் சர்வதேச பிரதிநிதிகள், தமது ஓய்வூதிய காலத்தில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு சிறிலங்காவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் சட்டமாஅதிபர் ரம்சி கிளாக், போர் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்ரீபன் ராப், ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நாவின் முன்னாள் வல்லுனர் ஜஸ்மின் ஆகியோரை இலக்குவைத்து தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், வல்லுனர்கள் என பலரது கூட்டுஅறிக்கைக்கு பின்னராக இவ்வாறான கோபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் இவர்களது உறவுகளுக்கான ஆதாரங்களை ஊடகப்பதிவுகளை குறிப்பிட்டு, சிறிலங்கா மீதான இவர்களது குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும், இவர்களின் நிலைப்பாடு ஒரு பக்கசார்பானது எனவும் இந்த ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
No comments