தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிரான்ஸ் நபர்! விசாரணை துரிதம் !
அல்ஜீரியாவில் பிரெஞ்சு மலைஏறுபவர் ஹெர்வ் கோர்டலின் கொலை தொடர்பாக ஜிஹாதி சந்தேக நபர்கள் வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
ஆறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஹெர்வ் கோர்டெல் கொலையுடன் தொடர்புடைய பதினான்கு பேரின் வழக்கு வியாழக்கிழமை அல்ஜியர்ஸில் விசாரணைக்கு வரவுள்ளது
55 வயதான ஹெர்வ் கோர்டல், செப்டம்பர் 21, 2014 கபிலி பிராந்தியத்தில் உள்ள ஜுர்ட்ஜுரா தேசிய பூங்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது கடத்தப்பட்டார்.
அவர் காணாமல் போன மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜுண்ட் அல்-கிலாஃபா என்ற போராளிக்குழுவின் துப்பாக்கிதாரிகள் அவரது கொடூரமான கொலை வீடியோவை வெளியிட்டனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அமைப்பு (IS) குழுவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரெஞ்சு அரசாங்கம் நிராகரித்திருந்தது.
கோர்டலின் உடல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்டதொரு பாரிய தாக்குதலைத் தொடர்ந்து, ஒரு கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
No comments