வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..!
இலங்கையில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 700 – 800 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதென்பது உத்தியோகபூர்வமற்ற தகவலாகும். எனினும் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதனை விடவும் அதிகமாகும்.
தற்போது மக்கள் வழமையான வாழ்க்கை முறைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நாளாந்தம் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை முன்னரை விடவும் குறைவான மட்டத்தில் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படும் நபர்களை நிலையங்களில் தனிமைப்படுவதற்கு போதுமான இட வசதிகள் இல்லாமையினால், தொற்றாளர்களை வீடுகளுக்கு அனுப்புவதன் மூலம் தொற்று பரவலின் நிலையை புரிந்துக்கொள்ள முடிகின்றது.
இவ்வாறு வைரஸ் பரவலை உரிய முறையில் கட்டுப்படுத்தாமல் கைவிட்டால், அது நாட்டினால் தாங்கிக்கொள்ள முடியாத அழிவாகி விடும் எனவும் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
No comments