70,000 தொற்றாளர்களை கடந்த 90வது நாடானாது இலங்கை!
2019 டிசம்பரில் கொரோனா பெருந்தொற்று அடையாளம் காணப்பட்டதில் இருந்து 70,000 கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்ட 90 வது நாடாக இலங்கை நேற்று மாறியது.
நேற்று 887 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 70,235 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 859 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணி 66,225 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 9 பேரும தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது, 5,729 பேர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, 740 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,141 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 711 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
No comments