புதிய கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு
உள்ளிருப்பைத் தள்ளிப் போடுவதற்கான அனத்துத் திட்டங்களையும் எமானுவல் மக்ரோன் போட்டுள்ள நிலையில், மீண்டும் அவசரமாக சகாதார பாதுகாப்பு ஆலோசனைச் சபையை (Conseil de défense sanitaire) கூட்ட உள்ளார்.
இதற்கான ஆணைகள், அனைத்து முக்கிய அமைச்சர்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது எதிர்வரும் புதன்கிழமை கூட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், அல்லது பிரதமர் ஜோன கஸ்தெக்ஸ் உரை நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்து மூன்று நாட்களில், மீண்டும் அதிரடியாக அவசரமாக சகாதார பாதுகாப்பு ஆலோசனைச் சபையை மக்ரோன் கூட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவத் துறையினர் உள்ளிருப்பின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments