Header Ads

உமிழ்நீரிலிருந்து கொரோனா பரிசோதனை! பிரித்தானிய அறிவியலாளர்கள்

 


பிரித்தானிய அறிவியலாளர்கள் உமிழ்நீரிலிருந்து கொரோனா தொற்றைக் கண்டறியும் எளிய பரிசோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இரண்டு கட்டங்களில் செய்யப்படும், உமிழ்நீரிலிருந்து கொரோனா தொற்றைக் கண்டறியும் சோதனையின் முடிவுகள் இரண்டு மணி நேரத்திற்குள் கிடைத்து விடும்.

‘Insight’ என்று அழைக்கப்படும் Wellcome Sanger என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அந்த சோதனையை, வழக்கமாக செய்யப்படும் சோதனையைவிட எளிதாக செய்யமுடியும்.

இந்த சோதனை பிசிஆர் முறை கொரோனா சோதனையைப் போன்றே சரியான முடிவை தரக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின் முதல் கட்ட முடிவுகள் இரண்டு மணி நேரத்தில் தெரியவந்துவிடும்.

பிறகு, அதே உமிழ்நீர் மாதிரி மரபியல் அடிப்படையிலான ஒரு இரண்டாம் கட்ட சோதனைக்காக அனுப்பிவைக்கப்படும்.

இந்த Insight’ என்று அழைக்கப்படும் சோதனை முறையில், முதல் கட்ட சோதனையில் தவறுதலாக கொரோனா இருப்பதாக காட்டப்பட்டிருந்தால் கூட, இரண்டாம் கட்ட சோதனையில் உண்மை தெரியவந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.