Header Ads

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி!



வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு நேற்று மதியம் மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.