பெண்ணிடம் நிர்வாண புகைப்படம் ஒன்றை அனுப்பும் படி கேட்ட காவல்துறை அதிகாரி..!!
காவல்துறை அதிகாரி ஒருவர் பெண் ஒருவரிடம் ஆபாச புகைப்படம் ஒன்றை கேட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், இச்சம்பவம் Rouen (Seine-Maritime) நகர காவல்நிலையத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் குறித்த காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்க வந்துள்ளார்.
அவர் கலந்துரையாடிய காவல்துறை அதிகாரி, சில நாட்களின் பின்னர் அப்பெண்ணுடன் தனியாக தொடர்புகொண்டு வந்துள்ளார்.
பின்னர் அப்பெண்ணின் அவரின் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை அனுப்பும் படி கோரியுள்ளார். அதை அடுத்து குறித்த பெண் மீண்டும் காவல்நிலையத்தில் மற்றுமொரு புகாரை அளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு பதியப்பட்ட புகாரை அடுத்து, காவல்துறையினரின் காவல்துறையான IGPN அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments