பிரான்சில் பெண்களுக்கான மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி பாடசாலைகளை அடுத்து, பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கான மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இது தொடர்பான வாக்கெடுப்பு ஒன்று இல் து பிரான்ஸ் மாகாண கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் முடிவில், இலவச மாதவிடாய் கால பொருட்கள் வழங்குவதற்கான ஆதரவு பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, உயர்கல்வி பாடசாலைகளில் படிக்கும் பெண்களுக்கு இலவச மாதவிடாய் பொருட்கள் வழங்கப்பட தீர்மானித்து, தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments