Header Ads

லண்டன் நகரை உலுக்கிய கோர சம்பவம்: பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கும் அதிகாரிகள்



 பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

தேசிய ஊரடங்கும் அமுலில் இருந்து வரும் நிலையில், நேற்று இரவு தெற்கு லண்டனில் குரோய்டன் பகுதியில் மட்டும் 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

இச்சம்பவங்களில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 3 மணி நேர இடைவெளியில் நடந்த இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இருந்து வரும் இச்சம்பவங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பதில் உறுதியான தகவல் ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பெப்ரவரி 6 சனிக்கிழமை காலை 8 மணி வரை குரோய்டன் முழுவதும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ளும் கூடுதல் அதிகாரங்களை காவல்துறைக்கு வழங்கும் பிரிவு 60 ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவுமாறு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.