கொரோனா நோயாளிகளால் நிரம்பும் நிலையில் - இல்-து-பிரான்சின் மருத்துவமனை!!!
இல்-து-பிரான்சின் மருத்துவமனைகளின் தீவிரசிகிச்சைப் பிரிவுகள் (services de réanimation) கொரோனா நோயாளிகளால் நிரம்பும் நிலையில், ஒரு எச்சரிக்கை ஒன்றை மருத்துவமனைகள் விடுத்துள்ளன.
.png)
அடுத்த திங்கட்கிழமையில் இருந்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள், மற்றும் சிகிச்சைகளை இரத்துச் செய்யும் நிலைக்கு அரசினர் வைத்தியசாலைகளான AP-HP (Assistance Publique-Hôpitaux de Paris) தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 707 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த வாரம் 616 ஆக இருந்தமை குறிபிடத்தக்கது. ஒரு வாரத்திற்குள் இல்-து-பிரான்சில் மட்டும் 100 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
No comments