அடுத்தடுத்த மாதங்களில் பிரான்ஸ் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் - பிரதமர்
பிரதமர் Jean Castex மற்றும் சுகாதார அமைச்சர் Olivier Véran தற்போது ஊடத்தினரை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டுள்ளனர். உடனுக்குடனான செய்திகளை இந்த இணைப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம். (பக்கத்தினை Refresh செய்யவும்)
20 மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்தார். அந்த மாவட்டங்களில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன.
அடுத்தடுத்த மாதங்களில் பிரான்ஸ் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் என தெரிவித்தார். <<எங்களுடைய பரிசோதனை முறைமைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை உடனடியாக நாம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.>> என பிரதமர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கும் போது, <<இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இருவரில் ஒருவர் பிரித்தானிய வகை கொரோனா தொற்றுக்குள்ளானவர் ஆவர்!>> என குறிப்பிட்டார்.
இன்று வியாழக்கிழமை 25.000 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக Olivier Véran குறிப்பிட்டார்.
இப்புகைப்படத்தில் உள்ள 20 மாவட்டங்களில் ‘மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு’ நடைமுறையில் இருக்கும்.
No comments