Header Ads

கொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு!




பெருந்தொகையான மக்கள் கூட்டத்தில் பரவுகின்றபோது வைரஸ் தன்னை வலுவாக உருமாற்றிக்கொள்ளும் திறனைப் பெறுகின்றது.அவை மாறி மாறி தங்களைத் தாங்களே பிரதி(copies) பண்ணிக் கொள்கின்றன.

சீன வைரஸ் என்ற பெயரில் தொடங்கி இங்கிலாந்து, பிறேசில், தென்னா பிரிக்கா என்று வரிசையாகப் பல  அவதாரங்களை எடுத்து வருகின்ற கொரோனா வைரஸின் ஆகப்பிந்திய திரிபுதான் நியுயோர்க் வைரஸ்.

அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டி ருக்கும் தகவல்களின்படி பெரிதும் தென்னாபிரிக்க வைரஸை ஒத்த புதிய திரிபு ஒன்று நியூயோர்க் நகரில் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட ஆய்வுகள் இந்தத் திரிபு தென்னாபிரிக்காவில் காணப்படுகின்ற மரபு மாற்றத்தைப்போன்று தடுப்பூசி மருந்துகளை எதிர்க்கும் திறனைக் கொண்டதாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இங்கிலாந்து வைரஸ் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தோன்றிய திரிபு போன்றவற்றை விடவும் நியூயார்க் நகரில் தென்பட்டுள்ள புது வைரஸ் தீவிர தொற்று வேகம்  கொண்டதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

பல்லாயிரக்கணக்கான வைரஸ்களினது தரவுகளைப் பேணுகின்ற GISAID என்னும் தரவுத்தளத்தில் ஸ்கான் செய்ததன் மூலம் B.1.526 எனப்படுகின்ற புதிய திரிபு நியூயோர்க் நகரில் அதிகம் பரவிவரு வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் தனர் என்று 'நியூயோர்க் ரைம்ஸ்' தெரிவித்துள்ளது.

மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



No comments

Powered by Blogger.