Header Ads

பிரான்சில் புதிய முழு ஊரடங்கு! மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தல்

 


பிரான்ஸில் புதிய ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் பிரான்சின் மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் Frederic Valletoux கொரோனா நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க புதிய நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

தலைநகர் பாரிஸுக்கு தெற்கே உள்ள Fontainebleau-வின் மேயராக இருக்கும் Frederic Valletoux, தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் நிலைமை கட்டுப்பாட்டுடன் இருந்த போதிலும் மிகவும் பதட்டமாக சூழலே காணப்பகின்றது.

நேற்று செய்தி தொடர்பாடலின் போது பிரான்ஸ் பிரதமர் Jean Castex, நாட்டில் கொரோனா நிலைமை பலவீனமாகவே இருக்கிறது.

ஆனால் தற்போது ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பல முன்னணி பிரான்ஸ் மருத்துவர்கள் புதிய ஊரடங்கு அவசியம் என்று கூறியுள்ளனர்.

பிரான்சில் இன்னும் தொற்று உச்சத்தில் இருப்பதால் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்று பாரிஸில் உள்ள Saint Antoine மருத்துவமனையின் தொற்று நோய்களின் தலைவர் Karine Lacombe தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.