ஹீரோவாக மாறிய மட்டு நகர் இளம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்.!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டதோடு நிறைவுற்றுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் நகரத்திலிருந்து தமிழ் முஸ்லிம் மக்களது பேராதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சுகாஸ், சுரேஷ் போன்றோரின் வழிகாட்டிதலின்கீழ் போராட்டம் ஆரம்பமாகி நான்காம் நாள் வடக்கே யாழ் பொலிகண்டியில் நிறைவுற்றது.
இந்த போராட்டத்தில் ஆரம்பத்திலிருந்து கலந்துகொண்டு பொலிஸ் இராணுவத்தினரின் பல்வேறுபட்ட தடைகளையும் கடந்து இறுதிவரை பயணித்த நாடாளுமன்ற உறுபினர் சாணக்கியன் பலரினதும் கவனத்தைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் சாணக்கியனுடன் செல்ஃபி எடுக்குமளவுக்கு வடக்கு மக்களின் மனங்களிலே சாணக்கியன் ஆழமாக பதிந்துள்ளார்.
கிழக்கு தமிழர்களதும் வடக்கு தமிழர்களதும் ஆத்மார்த்த உணர்வு ரீதியான ஒரு இளம் பிணைப்பாக சாணக்கியன் விளங்குவதாக இளைஞர்கள் பலரும் புகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments