கடந்த 24 மணி நேரத்திற்குள் 31.519 பேரிற்குக் கொரோனாத் தொற்று
பிரதமர் உரையாற்ற இருக்கும் நேரத்தில், கொரேனாத் தொற்று 30.000 இனைத் தாண்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 31.519 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 278 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 85 321 இனைத் தாண்டியுள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 60.720 பேர் சாவடைந்துள்ளனர்.
25.614 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.436 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
பிரான்சின் வைத்தியசாலைகளில் 65,6 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
No comments