பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் !!
மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue des Alouettes மற்றும் rue Botzaris வீதிகளுக்கு இடைப்பட்ட சந்தியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சமிக்ஞ்சை நிறுத்தத்தில் காத்திருப்பதை அவதானித்துள்ளனர்.
பின்னர் இளைஞனை சோதனையிட முடிவு செய்த காவல்துறையினர், அவரை தடுத்து நிறுத்தி, விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்போது அவரிடம் €5.000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதோட்டு அவரது உடைக்குள் 0.5 கிராம் மற்றும் 1 கிராம் போன்ற எடைகளை கொண்ட கொக்கைன் பொதிகள் கிடந்துள்ளன. ஒருவ்வொரு பொதிகளையும் €70 யூரோக்கள் படி இளைஞன் விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உடனடியாக இளைஞனை கைது செய்த காவல்துறையினர், அவரது வீட்டினையும் சோதனையிட்டனர். அங்கு கஞ்சா பொதிகள், கொக்கைன், கஞ்சா பிசின் கட்டிகள் உட்பட ஒரு 9mm கலிபர் வகை கைத்துப்பாக்கியும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் 22 வயதுடையவர் என அறிய முடிகிறது.
No comments