Header Ads

டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து இதுவரை 3 மில்லியன் சோதனை நடவடிக்கை!!

 


சனிக்கிழமை இரவு காவல்துறையினர் தீவிர வீதி கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

 
சனிக்கிழமை ஒரே இரவில் நாடு முழுவதும் 54,626 சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இடம்பெற்ற கண்காணிப்பில், ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய, சுகாதார நடவடிக்கைகளை மீறிய 4.593 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 
 
கடந்த டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து இதுவரை 3 மில்லியன் சோதனை நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 277,000 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.