இலங்கையில் மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவு !
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் மேலும் 518 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 734 ஆக அதிகரித்துள்ளது
திவுலப்பிட்டிய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட 264 பேர் இதில் அடங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 923 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 843 பேர் நேற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான ஐயாயிரம் பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments